கல்லாப் பிழையும், கருதாப் பிழையும்,


"கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகிநில்லாப் பிழையும், நினையாப் பிழையும்" என்பது பட்டினத்தார் அருளிய சிவபெருமான் குறித்து பாடிய பாடலின் பகுதி ஆகும், இதன் பொருள் இறைவனைப் பற்றி கற்காத பிழை, நினைத்துப் பார்க்காத பிழை, அவனது பெருமைகளைப் போற்றி உருகி நிற்காத பிழை, மற்றும் அவனை சிந்திக்காத பிழை ஆகிய பல பிழைகளையும் பொறுத்தருள்வாய் என்பதே ஆகும்.
 
இந்த வரிகளுக்குப் பிறகு, நின் அஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும் (நமசிவாய என்ற மந்திரத்தை சொல்லாத குற்றமும்), துதியாப் பிழையும் (துதிக்காத குற்றமும்), தொழாப் பிழையும் (தொழாத குற்றமும்) போன்ற மற்ற பிழைகளையும் பொறுத்தருளுமாறு கச்சி ஏகம்பனனிடம் (சிவபெருமான்) வேண்டுகிறார். 

கரும்பில் மூன்று வகை.
கறுப்பாக உள்ள கரும்பு தின்ன இனிக்கும்.
வெள்ளையாக உள்ளது சர்க்கரை உற்பத்திக்குப்
பயன்படும்,
மூன்றாவது வகையான பேய்க்கரும்பு எதற்கும்
பயன்படாது.

அது பெயரளவிலும் தோற்ற அளவிலும் தான்
கரும்பு. பட்டினத்தார் கையில் உள்ளது பேய்க்கரும்பு.

“பேய்க்கரும்பு உனக்கு எங்கு இனிக்கிறதோ,
அங்குதான் உனக்கு முக்தி” என்று பட்டனத்தாருக்கு
அருளப்பட்டு, அது திருவொற்றியூரில் இனித்தது
என்பது அடிகள் வரலாறு.

வாழ்க்கை என்பது நிரந்தரமான இன்பம் தராது. அதிலிருந்து முக்தி கிடைத்த பின்தான் அது உண்மையில் இனிக்கும் என்று பொருள்!

பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு, வாழ்க்கை இனிப்பானது என்பதைச் சொல்லத்தானே?
மேற்புறத்தில் கசப்பு கீழ்ப்புறத்தில் இனிப்பு இது பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு.
இடவெளியில் எல்லாம் உணர்ந்து நல்லன எடுத்து அல்லன தவிர்க்கும் நுனிக்கரும்பு கசக்கும். நல்லன சேர்க்கும் அடிக்கரும்பு இனிக்கும்.
அனுபவம் கசக்கும்.பக்குவம் இனிக்கும்.

No comments:

Post a Comment

சிவன் அருளாகி நின்றான், அன்பின் உருவாகி நின்றான் பரம்பொருள் ஞான நாதன், என்னுடன் ஒன்றாக மருவினான்....

சிவன் அருளாகி நின்றான், அன்பின் உருவாகி நின்றான் பரம்பொருள் ஞான நாதன், என்னுடன் ஒன்றாக மருவினான் சிவன் பரமாகி நின்றான், ஆன்மாவில் கலந்த...