சின்னதொரு இதயத்திலே எண்ணம் நூறு எழுகின்றதே


சின்னதொரு இதயத்திலே 

எண்ணம் நூறு எழுகின்றதே  

சொல்ல நானும் ஓடி வந்தேன் 

கண்டபோதே ஊமை ஆனேன் 

சின்னதொரு இதயத்திலே 

எண்ணம் நூறு எழுகின்றதே...

ஹே ..ஹே.. ஹே...  


புன்னகை கண்டு வியந்தேன் 

புதிதாய் நானும் பிறந்தேன்...ஓ 

புன்னகை கண்டு வியந்தேன் 

புதிதாய் நானும் பிறந்தேன் 

வானில் கொஞ்சம் மிதந்தேன் 

சிறகே இன்றி பறந்தேன் 

கண்கள் காண்கின்றது...ஓ 

நெஞ்சம் தொலைகின்றது...ஹே 

உன்னைக் காணாத வேளையில் அலைகின்றது 


சின்னதொரு இதயத்திலே 

எண்ணம் நூறு எழுகின்றதே  

சொல்ல நானும் ஓடி வந்தேன் 

கண்டபோதே ஊமை ஆனேன் 

சின்னதொரு இதயத்திலே 

எண்ணம் நூறு எழுகின்றதே...

ஹே ..ஹே.. ஹே...  


சின்ன சின்ன மீன்கள்  

போன்ற நீல கண்கள்..ஓ

சின்ன சின்ன மீன்கள்  

போன்ற நீல கண்கள்

வேண்டும் உந்தன் அண்மை  

மெழுகு போன்ற பெண்மை 

முன்னம் தேர் வந்தது ...ஓ 

சொர்கம் வா என்றது...ஹே

இன்னும் சொல்லாத ஆசைகள் யார் தீர்ப்பது


சின்னதொரு இதயத்திலே 

எண்ணம் நூறு எழுகின்றதே  

சொல்ல நானும் ஓடி வந்தேன் 

கண்டபோதே ஊமை ஆனேன் 

சின்னதொரு இதயத்திலே 

எண்ணம் நூறு எழுகின்றதே...

ஹே ..ஹே.. ஹே.. 



No comments:

Post a Comment

சிவன் அருளாகி நின்றான், அன்பின் உருவாகி நின்றான் பரம்பொருள் ஞான நாதன், என்னுடன் ஒன்றாக மருவினான்....

சிவன் அருளாகி நின்றான், அன்பின் உருவாகி நின்றான் பரம்பொருள் ஞான நாதன், என்னுடன் ஒன்றாக மருவினான் சிவன் பரமாகி நின்றான், ஆன்மாவில் கலந்த...