நீ மனதால் அழகு, உள்ளம் தான் பெரியது, தோற்றத்தை வைத்து மனிதனை நீ அளவிடல் ஆகாது! கண்ணுக்கு தெரிவது மாயை, உண்மை அல்லவே, நல்ல மனம் இருந்தால், வாழ்க்கை பொலிவாகுமே! வெளியில் தோற்றம் மாறலாம், மனம் மாறாது, நல்ல உள்ளம் இருந்தால், வாழ்வு தோல்வியாகாது. பொய்யான முகமூடி, உலகில் நிறையவே, அன்பு மட்டும் உண்மையை, என்றும் காட்டுமே! நீ மனதால் அழகு, உள்ளம் தான் பெரியது, தோற்றத்தை வைத்து மனிதனை நீ அளவிடல் ஆகாது! கண்ணுக்கு தெரிவது மாயை, உண்மை அல்லவே, நல்ல மனம் இருந்தால், வாழ்க்கை பொலிவாகுமே! பணமும் புகழும் வந்தாலும், மனம் முக்கியமே, அன்பும் பணிவும் இருந்தால், உயர்ந்திடுவோமே. தோற்றத்தில் உயர்ந்தவர், உள்ளத்தில் வீழலாம், நல்லவர் மனதினிலே, உலகம் வாழுமே! நீ மனதால் அழகு, உள்ளம் தான் பெரியது, தோற்றத்தை வைத்து மனிதனை நீ அளவிடல் ஆகாது! கண்ணுக்கு தெரிவது மாயை, உண்மை அல்லவே, நல்ல மனம் இருந்தால், வாழ்க்கை பொலிவாகுமே! எல்லோரும் ஒரு குடும்பம், அன்பில் இணைவோம், தோற்றத்தை மறந்து, மனதால் நடப்போம்!
Welcome to Sindoor Waves, where tradition meets modern vibes! Dive into a vibrant blend of Indian culture, lifestyle, beauty, and heartfelt stories. From festive inspirations to everyday elegance, our channel celebrates the colors and rhythms of life. Join us for a journey that flows like waves and sparkles with sindoor’s timeless charm! https://www.youtube.com/@sindoorwaves Suggestiions to email: vselvaraj@vselvaraj.com
மயிலும் வாகனம் ஆகியதால், விரைந்து நீயும் வந்துவிடு!மயிலே, மயிலே என்றழைத்தால், அங்கே நீயும் இருப்பாயே
சூரர் படையை அழித்தவனே! தேவர் குலத்தை காத்தவனே. ! திருச்செந்தூர்க் கடலலை ஆண்டவனே! சூரன் உடலும் கிழிந்தவுடன், வேலும் மயிலும் ஆனதுவே.! சேவலை கொடியாய் பெற்றவனே, மயிலும் வாகனமாகியதே! மயிலும் வாகனம் ஆகியதால், விரைந்து நீ வந்துவிடு! மயிலே, மயிலே என்றழைத்தால், அங்கே நீயும் இருப்பாயே !
அவ்வை பாட்டியை சோதிக்க, நாவல் மரத்தின் மேலேறி, சுட்ட பழத்தை தந்தவனே ! சுகமாய் காட்சி தந்திடுவாய்......! மாங்கனி பெற வேண்டி., உலகை வலமாய் வந்தவனே.! அம்மை, அப்பனே, உலகம் என்று அண்ணனும் நமக்குச் சொன்னானே. ... அதுவும் உனக்கும் தெரியுமன்றோ, தெரிந்து நீயும் எமக்காகப், பழனி மலையின் மீதமர்ந்து பக்தருக்கு அருள அங்கு வந்தாய்..! தையல் நாயகி பெற்ற மகன் செல்வமுத்து குமரனவன் ! அழியா செல்வம் பெற்றிடவே, அருகில் என்றும் இருந்திடுவாய் ! முருகா, முருகா, வேல் முருகா, வெற்றிகள் தருவாய், வேல்முருகா! முருகா, முருகா, வேல் முருகா, வெற்றிகள் தருவாய், வேல்முருகா! வெற்றி வேலை பெற்றதினால், உன்னை பணியும் பக்தர்க்கு, என்றும் வெற்றி, வெற்றியன்றோ? வேல் வேல் முருகா, வேல் முருகா ! திருப்பரங்குன்றத்தில் கல்யாணம். தெய்வானையுடன் நடந்தது வே ! வாழ்த்திட வந்தனர், தேவர்களும், வாழிய, வாழிய, வாழியவே !
அதிகாலை சங்கின் நாதத்திலே, ஓம் என்னும் ஒலியே கேட்கிறது ! ஓங்கார பொருளும் ஆனவனே. ஹர ஹர சிவனே, சண்முகனே! பாம்பன் சுவாமிகள், அருணகிரி, தெய்வப் புலவன் நக்கீரன் , இவர்கள் பாட்டுக்கு வந்து விட்டாய், எங்கள் பாட்டுக்கும் வந்து விடு!
பாம்பன் சுவாமிகள், அருணகிரி, தெய்வப் புலவன் நக்கீரன் , இவர்கள் பாட்டுக்கு வந்து விட்டாய், எங்கள் பாட்டுக்கும் வந்து விடு! இச்சா சக்தி தெய்வானை, கிரியா சக்தி வள்ளியுடன் பழமுதிர் சோலையில் இருப்பவனே வாழுகிறோம் நாங்களும் வந்துவிடு !
அங்கே பாருங்கள் எல்லோரும் பச்சை மயிலும் தெரிகிறது வேலுடன் முருகன் வருகின்றார்! பச்சை மயிலும் தெரிகிறது வேலுடன் முருகன் வருகின்றார் ! ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே முருகா முருகா வேல் முருகா ! வெற்றிகள் தருவாய் வேல் முருகா ! முருகா முருகா வேல் முருகா வெற்றிகள் தருவாய் வேல் முருகா ! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
நீ மனதால் அழகு, உள்ளம் தான் பெரியது
நீ மனதால் அழகு, உள்ளம் தான் பெரியது, தோற்றத்தை வைத்து மனிதனை நீ அளவிடல் ஆகாது! கண்ணுக்கு தெரிவது மாயை, உண்மை அல்லவே, நல்ல மனம் இருந்தால்...
-
முருகா முருகா முருகா சரஹணபவ.. கள்ளம் கபடம் இல்லா உள்ளம் தா முருகா வேலவா வேல் முருகா வந்தேன் உன் பாதமலர் அருள் தருவாய் ஆறுமுகா அடியேன் உனைத் ...
-
முருகா முருகா முருகா சரஹணபவ.. மருதமலை முருகனே, மயிலேறி வருவாயே, சஷ்டி நாளில் அருள் தருவாய், சரணம் உனை அடைவேன்! வேல் முருகா, வெற்றி தருவாய், ...
-
இந்த நேரம் எங்கோ மழை பொழிகின்றது இதே நேரம் எங்கோ வெயில் சுடுகின்றது செடியில் எங்கோ மலர் துளிர்க்கின்றது புயலில் எங்கோ மரம் விழுகின்றது!...
